முளைக்கட்டிய பழுப்பு அரிசி
முளைத்த பழுப்பு அரிசி " முளைக்கட்டிய பழுப்பு அரிசி" ஆகும். இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முளைத்த பழுப்பு அரிசியில் காமா அமிநோபுட்டிறிக் அசிட் (GABA) உள்ளது. பழுப்பு அரிசியை தண்ணீரில் ஊற வைத்து மற்றும் முளைக்க வைப்பதன் மூலம் முளைத்த பழுப்பு அரிசியை பெறலாம். இந்த முறையானது அதகபடியான GABA மற்றும் புரத சத்துக்கள், என்சைம்கள் உருவாக சிறந்த முறையாகும். இந்த முளைக்கட்டும் முறையில் பயனுள்ள அளவில் பெருலிக் அமிலம், லைசின், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஈ, நியாஸின், வைட்டமின் பி 6, தயாமின், மற்றும் நார்ச்சத்து உணவு உள்ளது. இது செரிமானத்தின் போது வெளியிடும் சத்துக்களை நன்றாக உறிஞ்ச முடிகிறது மற்றும் குடல் எரிச்சல், வீக்கம் மற்றும் ஒவ்வாமையை தடுக்கிறது. முளைத்த பழுப்பு அரிசியை உலர்ந்த நிலையில் அடுக்கில் சேமித்து வைப்பதன் மூலம் அதன் மேம்பட்ட ஊட்டச்சத்து மதிப்பு மாறாது.